புதுச்சேரி

புதுச்சேரி பி.டெக். லேட்ரல் என்ட்ரி: இறுதி தரவரிசை, 2-ம் கட்ட வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் பி.டெக். படிப்புகளுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை எனப்படும் லேட்ரல் என்ட்ரி முறையில், சென்டாக் கணினி கலந்தாய்வை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுப்பிக்கப்பட்ட இறுதி தரவரிசைப் பட்டியலும் 2-ம் கட்ட வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது ஒதுக்கீட்டு விவரங்களை சென்டாக் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து சரிபார்த்துக் கொள்ளலாம். பட்டியலில் ஏதேனும் தவறு அல்லது ஆட்சேபனை இருந்தால், தங்கள் லாக்-இன் பக்கத்தில் உள்ள குறைதீர் அல்லது ஆட்சேபனைப் பகுதி மூலம் ஆகஸ்ட் 11-ம் தேதி காலை 10 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

மாணவர்களிடமிருந்து பெறப்படும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு 2-ம் கட்ட தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களது ஒதுக்கீட்டு ஆணையை இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்டாக் உதவி எண்கள் 0413-2655570 மற்றும் 0413-2655571; உதவி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன