தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை மசோதாவை ரத்து செய்ய வேண்டும்: மாணிக்கம் தாகூர்

தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு முழுமையாகக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். இந்த மசோதா தமிழக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் மாநிலத்தின் உரிமைகளையும் பாதிக்கும் என அவர் குற்றம் சாட்டினார்.

இது குறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காங்கிரஸ் சார்பில் நாளை முதல் மாவட்ட வாரியாகப் பேரணிகள் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்த விழிப்புணர்வுப் பேரணி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழகத்திற்கு, தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்ற இடங்களைக் குறைப்பது அநீதியானது என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிராக வாக்களிப்பார்கள் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன