புதுச்சேரி வருகை: அமித் ஷாவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதுச்சேரி வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, புதுச்சேரி அரசு மற்றும் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவருக்குப் பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
இந்த வரவேற்பின்போது முதலமைச்சர் ந. ரங்கசாமி, லெப்டினன்ட் கவர்னர் கே. கைலாசநாதன், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜான் குமார், சார்லஸ் மார்ட்டின் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் உள்ளிட்டோர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வரவேற்றனர்.
புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருதை வழங்கும் நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அரசு நிர்வாகம், காவல்துறை மற்றும் பாஜக நிர்வாகிகள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.






