தேசியம்

டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: அமித் ஷா பதவி விலக ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்கள் மீது தடியடி மற்றும் பெலட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் மோடி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார். இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

In brief (English)

Rahul Gandhi demanded the resignation of Home Minister Amit Shah after police allegedly used lathi-charge and pellet guns against students protesting in Delhi over NEET paper leaks. He called for a Supreme Court-monitored probe into the incident.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *