புதுச்சேரி

தாயின் பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு பெறலாம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை: புதுச்சேரியில் தாயின் பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு பட்டியலினத்தவர் (SC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) ஆகிய பிரிவுகளுக்கான சாதிச் சான்றிதழ்களைப் பெற முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தந்தை வழிச் சமூகம் அல்லது தாய் வழிச் சமூகம் என்பதில் எந்தப் பாகுபாடும் பார்க்கத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. புதுச்சேரியில் தாயின் பூர்வீக உரிமையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுச் சான்றிதழ் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமைகளை வழங்குவதில் பாலின வேறுபாடோ அல்லது தந்தை வழி ஆதிக்க அணுகுமுறையோ தடையாக இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டது.

தாயின் சமூகப் பின்னணி மற்றும் பூர்வீகத்தை ஆதாரமாகக் கொண்டு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்களுக்கு உரிய சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு, புதுச்சேரியில் வசிக்கும் தாய்வழி குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெரும் பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன