புதுச்சேரி

புதுச்சேரியில் ஊழல் புகார்களை தெரிவிக்க ‘1064’ கட்டணமில்லா தொலைபேசி எண் ஒதுக்கீடு: மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில் ‘1064’ என்ற பிரத்யேக இலவச உதவி எண் (Short Code) ஒதுக்கீடு செய்யப்பட்டு மத்திய அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி அரசின் தலைமை கண்காணிப்பு அதிகாரி மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவு விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை (DoT) இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள பொதுமக்கள் இனி ‘1064’ என்ற எண்ணை அழைத்து தங்களது லஞ்ச ஒழிப்பு புகார்களை நேரடியாகப் பதிவு செய்ய முடியும்.

இந்த அழைப்புக்கான கட்டணத்தை அழைப்பைப் பெறும் துறையே ஏற்கும் (Called Party Pays) என்றும், அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் இந்த சேவையை கட்டாயமாக வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 1064 எண்ணின் இணைப்பு எண் 18005991064 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச்சேவைக்கான தொடர்பு அதிகாரியாக (Nodal Officer) புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு. நல்லம் கிருஷ்ணராய பாபு நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு 0413-2238017 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், spvac@py.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன