தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.டி.ஏ வேட்பாளர் அசோக் ஆனந்த் அறிமுகக் கூட்டம்; அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாசியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் அவர்களின் அதிகாரப்பூர்வ அறிமுகக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கலந்துகொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம், முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். தட்டாஞ்சாவடி தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தேர்தல் களப்பணிகளை தீவிரமாக முன்னெடுக்க நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

