தமிழ்நாடு

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்: ₹63.81 கோடி நிதியில் 11.80 லட்சம் ஏக்கரில் சாகுபடி

சிறுதானிய உணவுகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கம்பு, சோளம், கேள்வரகு போன்றவற்றின் உற்பத்தியைப் பெருக்க ‘தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்’ ₹63.81 கோடி ஒன்றிய-மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது. 2026-27ஆம் ஆண்டில் உழவர் குழுக்கள் அமைத்தல், மாற்றுப்பயிர் சாகுபடி மானியம், சிறுதானிய விதைகள் விநியோகம் மற்றும் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 11.80 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானிய சாகுபடி செய்யப்பட்டு, 4.75 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.

In brief (English)

The Tamil Nadu Millet Mission receives Rs 63.81 crore funding to boost millet farming across 11.80 lakh acres, helping 4.75 lakh farmers.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன