தமிழ்நாடு

தமிழ்நாடு தளிர் கீரைகள் திட்டம்: நகர்ப்புறங்களுக்கு 20,000 தளிர் கீரை தொகுப்புகள் வழங்க நடவடிக்கை

தாவரங்களின் இளம் நாற்றுகளான தளிர் கீரைகளில் முதிர்ந்த செடியினை விட 40 மடங்கு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனைப் பொதுமக்கள் இடையே ஊக்குவிக்கும் வகையில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற நகரங்களில் 20,000 தளிர் கீரை தொகுப்புகள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதில் விதைகள், வளர்ப்பு தட்டுகள், தென்னைநார் கட்டிகள் மற்றும் வழிகாட்டி கையேடு ஆகியவை இடம்பெறும். இத்திட்டத்திற்காக 2026-27ஆம் நிதியாண்டில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர்ப்புற மக்களிடையே சத்தான உணவு விழிப்புணர்வு அதிகரிக்கும்.

In brief (English)

The Tamil Nadu government will distribute 20,000 microgreen kits to residents in major cities to promote nutrient-rich home farming. The state has allocated ₹1.20 crore for this project.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன