தமிழ்நாடு

மதுராந்தகம் இடைத்தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுக் கலந்தாய்வுக் கூட்டம் தீவிரம்!

நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் மதுராந்தகத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷ்ணு பிரசாத், சசிகாந்த் செந்தில், சுதா ராமகிருஷ்ணன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கே. சிரஞ்சீவி ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் களப்பணிகள் மற்றும் வாக்குச்சாவடி அளவிலான தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

மேலும், அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. காமாட்சி, தேர்தல் வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் உள்ளிட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்றனர். தேர்தல் களத்தில் அனைத்துத் தலைவர்களும் ஒருங்கிணைந்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு மகத்தான வெற்றியை ஈட்ட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன