புதுக்கோட்டையில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் ரேக்ளா பந்தயம்: உற்சாகமாகத் தொடங்கி வைப்பு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழர்களின் பாரம்பரியமும் வீரமும் நிறைந்த மாபெரும் ரேக்ளா பந்தயம் வெகு உற்சாகமாக நடைபெற்றது. இப்போட்டியை லட்சிய ஜனநாயக கட்சித் தலைமை கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்ததுடன், களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டது.
ரேக்ளா பந்தயத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பிரச்சார வாகனத்தில் சென்று பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. வழிநெடுகிலும் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தங்களுக்குப் பேராதரவும் அன்பும் நல்கிய பொதுமக்களுக்கு கட்சித் தலைமை தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
இந்த வீர விளையாட்டு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்வில், லட்சிய ஜனநாயக கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா, முக்கிய மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.



