புதுச்சேரி

சுல்தான்பேட்டையில் விபத்தில் சிக்கிய தம்பதி: சொந்த காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வில்லியனூர் எம்.எல்.ஏ. ரவிகுமார்!

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் விபத்தில் சிக்கிய நிலையில், அவ்வழியாக சென்ற வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. ரவிகுமார் உடனடியாக அவர்களை மீட்டு தனது வாகனத்திலேயே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சுல்தான்பேட்டை பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக களப் பணிகளுக்காக காரில் சென்ற சட்டமன்ற உறுப்பினர் பி. ரவிகுமார், விபத்தைக் கண்டதும் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி காயமடைந்தவர்களை மீட்க விரைந்தார்.

காயமடைந்த தம்பதிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை தேவைப்பட்டதால், ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல் தனது சொந்த வாகனத்திலேயே அவர்களை ஏற்றி உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சட்டமன்ற உறுப்பினரின் மனிதநேயமிக்க செயலுக்கு அப்பகுதி மக்களும் சமூக வலைதளங்களில் பொதுமக்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன