தமிழ்நாடு

தமிழ்நாடு முதல்வர் பெயரில் போலி AI ‘டீப் ஃபேக்’ வீடியோ: சைபர் கிரைம் போலீசாரால் ஒருவர் கைது!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பெயரில் போலி AI ‘டீப் ஃபேக்’ (Deepfake) வீடியோ தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் நவீன தொழில்நுட்பக் கருவிகளின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதலமைச்சர் குறித்து தவறான தகவலை பரப்பும் நோக்கில் போலி வீடியோவை தயாரித்து பதிவேற்றிய நபரை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிற நபர்களைக் கண்டறியும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்குவதும், அதனைப் பரப்புவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. இத்தகைய போலி வீடியோக்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகிராமல், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்த தனிப்படை போலீசாரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், ஐ.பி.எஸ். வெகுவாகப் பாராட்டினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன