தமிழ்நாடு

4,724 தற்காலிக செவிலியர் பணிக்கு 49,000 பேர் விண்ணப்பம்: பணி நியமன ஆணை வழங்கும் பணி தீவிரம்!

சென்னை, அக். 6:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தற்காலிக முறையில் 4,724 செவிலியர் பணியிடங்களை நிரப்ப தேசிய நலவாழ்வு குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது. இப்பணிகளுக்கு மாநிலம் முழுவதும் இருந்து 49 ஆயிரம் செவிலியர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.21,000 தொகுப்பூதியத்தில் 4,724 செவிலியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டது. மாவட்ட சுகாதார நலவாழ்வுச் சங்கம் மூலமாக இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

இப்பணிகளுக்கு சில செவிலியர் சங்கங்கள் தற்காலிக பணி நியமன முறையை எதிர்த்து வந்த போதிலும், வேலைவாய்ப்பை எதிர்நோக்கி சுமார் 49 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட வாரியாகப் பணி ஒதுக்கீட்டு ஆணைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன