தமிழ்நாடு

குறைதீர் கூட்டத்தில் காதில் பூ வைத்த விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டத்தில், காதில் பூ வைத்தபடி விவசாயிகள் பங்கேற்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும், அதிகாரிகள் அளிக்கும் உறுதிமொழிகள் செயல்பாட்டுக்கு வருவதில்லை என்றும் கூறி அவர்கள் இவ்வாறு நூதன முறையில் கவனம் ஈர்த்தனர்.

குறிப்பாக பயிர்க்கடன் தள்ளுபடி, பாசன நீர் வசதி, மின்சார இணைப்பு, பயிர் சேத நிவாரணம் மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

“கோரிக்கைகளை கேட்டு அதிகாரிகள் எங்களை ஏமாற்றி வருவதாக உணர்கிறோம்” என்பதை சுட்டிக்காட்டும் அடையாளமாகவே காதில் பூ வைத்துப் பங்கேற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் அதிகாரிகள் கோரிக்கைகளைப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன