புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் அசோக் ஆனந்தன் என்னைவிட அதிக வாக்குகளில் வெற்றி பெறுவார்: முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி, 16/9/2026: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் மற்றும் வேட்புமனு தாக்கல் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் என்.ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் என்.எஸ்.ஜே.ஜெயபால், அமைச்சர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரவிக்குமார், ஐயப்பன், மோகன்தாஸ், அழகு (எ) அழகானந்தம், பாமக அமைப்பாளர் மதியழகன், முன்னாள் சபாநாயகர் செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “பிரதமர் நரேந்திர மோடி புதுவை மாநில வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துத் தொடர்ந்து வழங்கி வருகிறார். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அசோக் ஆனந்தன், கடந்த தேர்தலில் நான் பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறுவார். தேர்தல் முடிவுகளுக்குப் பின் புதுவைக்கு முழு மாநில அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசிடம் தீவிரமாக வலியுறுத்துவோம்” என்றார்.

மேலும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த முதலமைச்சர், மக்கள் புதுவையின் வளர்ச்சியை நன்கு உணர்ந்துள்ளதால்தான் தம்மைத் தொடர்ந்து முதலமைச்சராகத் தேர்வு செய்து வருகின்றனர் என்றும், மக்கள் அளிக்கும் வாக்குகளே சிறந்த அரசுக்கான சான்று என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன