தமிழ்நாடு

செப்டம்பர் 10, 11-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்கள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள உத்தரவில், பரமக்குடி நகரில் நடைபெறவுள்ள தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தின நிகழ்வையொட்டி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளிலும் முழுமையாக மூடப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்கள் அல்லது பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் மீது காவல்துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மூலம் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன