தமிழ்நாடு

சென்னையில் இன்று தென் மண்டல குழு கூட்டம்: அமித் ஷா தலைமையில் முதலமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை, ஆகஸ்ட் 19: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 31-வது தென் மண்டல குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று இரவு 7.40 மணிக்கு சென்னை வருகை தருகிறார். புதுதில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வரும் அவருக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

நாளை ஆகஸ்ட் 20-ஆம் தேதி, சென்னை கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய், கர்நாடகா முதல்வர் டி.கே. சிவக்குமார், கேரளா முதல்வர் வி. சதீசன், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம், மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் மற்றும் அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

மாநாட்டையொட்டி சென்னை விமான நிலையம் முதல் கோவளம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை மாநாடு முடிந்த பிறகு, அமித் ஷா மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் வழிபாடு முடித்துவிட்டு மாலை 3.45 மணிக்கு புதுதில்லிக்குத் திரும்புகிறார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன