புதுச்சேரி

புதுச்சேரி பிரெஞ்சு சர்வதேச பள்ளியின் 200-வது ஆண்டு தொடக்க விழா: பிரெஞ்சு தூதர் பங்கேற்பு!

புதுச்சேரி, செப். 3: புதுச்சேரி பிரெஞ்சு சர்வதேச பள்ளியில் (LFIP) 200-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி, புதிய கல்வி ஆண்டின் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் உற்சாகமாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

பள்ளி நிறுவப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் இச்சிறப்பு நிகழ்வில், புதுச்சேரி மற்றும் சென்னைக்கான பிரெஞ்சு தூதர் எட்டியென் ரோலண்ட்-பியக் (Étienne Rolland-Piègue) கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கல்வி, அறிவுப் பகிர்வு மற்றும் சர்வதேச நட்புறவின் முக்கியத்துவத்தை பள்ளி சமூகத்தினரிடையே எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து பள்ளியின் இசை ஆசிரியை ஹெலன் வீரமணி தலைமையில் மாணவர்களின் மனதை மயக்கும் வரவேற்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரியம் மற்றும் சிறப்பான கல்வியை பறைசாற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, 200-வது ஆண்டு கல்வி ஆண்டிற்கு மிகச் சிறந்த மற்றும் உற்சாகமான தொடக்கமாக அமைந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன