புதுச்சேரி

வேளாங்கண்ணி நடைபயணம் மேற்கொண்ட அமைச்சர் மரியவில்சன்: தவெக ஆர்.எஸ்.ராஜேஷ் நடராஜர் சிலை வழங்கி வரவேற்பு!

புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து வேளாங்கண்ணி நோக்கிப் புனித நடைபயணம் மேற்கொண்ட அமைச்சர் மரியவில்சனுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் இணைந்த ஆர்.எஸ்.ராஜேஷ் சால்வை அணிவித்து, நடராஜர் சிலை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார்.

பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், புதுச்சேரியிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி அமைச்சர் மரியவில்சன் நடைபயணத்தைத் தொடங்கினார்.

இந்த நடைபயணத்தின் வழியில் அவரை நேரில் சந்தித்த தவெக நிர்வாகி ஆர்.எஸ்.ராஜேஷ், அமைச்சருக்குப் பொன்னாடை போர்த்தி, நடராஜர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் மரியவில்சனுடன் இணைந்து ஆர்.எஸ்.ராஜேஷும் சிறிது தூரம் பாதயாத்திரையில் கலந்துகொண்டு உற்சாகமாக நடைபயணம் மேற்கொண்டார். அரசியல் தளங்களைக் கடந்து நிகழ்ந்த இந்தச் சந்திப்பு அப்பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன