புதுச்சேரி

முதல்வரின் உண்மையான ஆதரவாளர் யார் என்பதை நிரூபித்த கதிர்காமம் மக்களுக்கு நன்றி: சட்டசபையில் அழகு எம்.எல்.ஏ. பேச்சு!

புதுச்சேரி: முதலமைச்சர் என்.ரங்கசாமியின் உண்மையான ஆதரவாளர் யார் என்பதை வாக்களித்து ஊர்ஜிதம் செய்த கதிர்காமம் தொகுதி வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக சட்டமன்ற உறுப்பினர் அழகு சட்டசபையில் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய அவர், கதிர்காமம் தொகுதி மக்கள் என் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்து வெற்றி பெறச் செய்துள்ளனர். இதன் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமியின் உண்மையான மற்றும் தீவிர ஆதரவாளர் யார் என்பதைத் தேர்தல் களத்தில் கதிர்காமம் மக்கள் மிகத் தெளிவாக ஊர்ஜிதம் செய்துள்ளனர் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தொகுதி மக்களின் வளர்ச்சிக்கும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி எப்போதும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என்று அவர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன