விடுதலை நகரில் விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட விடுதலை நகரில் மாணவர்கள் மற்றும் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் மகளிரில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மாநில துணைத் தலைவருமான ஏ. பாஸ்கர் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர் சந்திரன், பாஜக பிரமுகர் லயன் சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன், பாஜக பிரமுகர் சுரேஷ்குமார், குணசேகரன், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் மகளிரை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
