புதுச்சேரி
வேலை கேட்டு செல்போன் டவர் மீது ஏறி தொழிலாளி போராட்டம்: சேதராப்பட்டில் பரபரப்பு
புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுமன் என்பவர் அங்குள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்தார். பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர், போதையில் செல்போன் டவர் மீது ஏறி மீண்டும் வேலை கேட்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, வேலை பெற்றுத் தருவதாக உறுதியளித்து அவரை கீழே இறக்கினர். கீழே இறங்கியதும் அவர் அங்கிருந்து தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
In brief (English)
A sacked liquor store employee in an intoxicated state climbed a high mobile tower demanding re-employment in Sedarapet before police coaxed him down.


