புதுச்சேரி

துணைநிலை ஆளுநருக்கு எம்.எல்.ஏ. வாழ்த்து

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் குன்னில் கைலாஷ்நாதனுக்கு பிறந்தநாளை முன்னிட்டு, காமராஜ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மாண்புமிகு துணைநிலை ஆளுநர் குன்னில் கைலாஷ்நாதனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். புதுச்சேரியின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி மக்களின் நலன் மற்றும் மாநில வளர்ச்சிக்காக துணைநிலை ஆளுநரின் சேவை தொடர வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் தலைமையில் அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் அ. ஜான் குமார், டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏம்பலம் செல்வம் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது துணைநிலை ஆளுநருக்கு பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன