புதுச்சேரி

புதுச்சேரியின் முதலாவது முதலமைச்சர் ஏதுவார் குபேர் அவர்களுக்கு மரியாதை

புதுச்சேரி, ஆகஸ்ட் 14: புதுச்சேரியின் முதலாவது முதலமைச்சரான திரு. ஏதுவார் குபேர் (Édouard Goubert) அவர்களின் நினைவாக இன்று (ஆகஸ்ட் 14) காலை 10 மணியளவில் பாரதி பூங்கா அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் புதுச்சேரி பிரதேசக் காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான திரு. வெ. வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் திரு. வே. நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் திரு. காந்தசாமி மற்றும் மாநில நிர்வாகிகள், தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன