தமிழ்நாடு

தொழில் துறையில் 50 ஆண்டுகள் நிறைவு: ஊழியர்களுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசு வழங்கி அசத்திய சாண்டியாகோ மார்ட்டின்

மார்ட்டின் குழுமங்களின் தலைவர் சாண்டியாகோ மார்ட்டின் வர்த்தக உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு கோவையில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நிறுவனத்தில் பணிபுரிந்த 50 ஊழியர்களுக்கு தலா ரூ.30 லட்சத்திற்கான காசோலைகளை சாண்டியாகோ மார்ட்டின் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் அன்னபூர்ணா குழும நிர்வாக இயக்குனர் சீனிவாசன், கேஜி மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம் மற்றும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஜான்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஊழியர்களை குடும்ப உறுப்பினர்களாக பாவித்து இவ்வளவு பெரிய தொகையை பரிசாக வழங்கிய சாண்டியாகோ மார்ட்டினின் செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

In brief (English)

Celebrating 50 years in business, Martin Group Chairman Santiago Martin presented cash rewards of Rs 30 lakh each to 50 employees who completed over 25 years of service. The grand celebration was held at the group’s headquarters in Coimbatore.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *