காரைக்கால் துறைமுகத்தில் விசைப்படகில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு: 3 பேர் தீவிர சிகிச்சை
காரைக்கால் மேட்டைச் சேர்ந்த விஜயேந்திரனுக்கு சொந்தமான விசைப்படகு மீன்பிடித்துவிட்டு காரைக்கால் துறைமுகம் திரும்பியது. அதிகாலை வேளையில் படகில் இருந்த மீன்களை விற்பனைக்காக இறக்க ஊழியர்கள் முற்பட்டனர். அப்போது படகின் உட்பகுதிக்குச் சென்ற ஒரு தொழிலாளிக்கு விஷவாயு தாக்கி மயக்கம் ஏற்பட்டது. அவரை காப்பாற்ற முயன்ற மேலும் 3 தொழிலாளர்களும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் நான்கு பேரையும் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மயிலாடுதுறையைச் சேர்ந்த கதிரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிரவி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
In brief (English)
A fishing worker died and three others were hospitalized after inhaling toxic gas inside a boat’s hold at Karaikal Fishing Harbour. Police have registered a case and are investigating the source of the gas leakage.