புதுச்சேரி

காமராஜர் நகர் தொகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் திறப்பு: எம்.எல்.ஏ ஜோ சாலஸ் மார்ட்டின் நடவடிக்கை

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் நோக்கில் செல்லான் நகர் மற்றும் சுந்தரமூர்த்தி நகர் பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இத்திட்டங்களை லட்சிய ஜனநாயக கட்சி தலைவரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோ சாலஸ் மார்ட்டின் திறந்து வைத்தார். செல்லான் நகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை நேரடியாக பருகி தரத்தை உறுதி செய்த அவர், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். புதுச்சேரி முழுவதும் 50 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் முதன்முறையாக காமராஜர் நகரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சுந்தரமூர்த்தி நகரிலும் மற்றொரு நிலையத்தை திறந்து வைத்த அவர் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

In brief (English)

Kamaraj Nagar constituency MLA Jo Soles Martin inaugurated purified drinking water stations in Chellan Nagar and Sundaramurthy Nagar. He personally tested the water quality and distributed free drinking water and sweets to local residents.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *