புதுச்சேரி
அண்ணா சாலையில் ரூ.10 சட்ட இயக்கத்தினர் நூதன போராட்டம்
புதுச்சேரி 10 ரூபாய் சட்ட இயக்கம் சார்பில், புதுவை அரசுக்கு கண்டனம் தெரிவித்து அண்ணா சாலையில் தலையில் முக்காடிட்டு சுவற்றை பார்த்து அமர்ந்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்திற்கு அமைப்பின் நிறுவனர் ரகுநாதன் தலைமை தாங்கினார். இதில் அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கொள்ளை விலை அதிகரிப்பால் மண்ணின் மைந்தர்கள் புதுச்சேரியில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதை அரசு திரும்பிக்கூட பார்க்கவில்லை என்பதை வலியுறுத்தும் விதமாகவே இந்த நூதன போராட்டம் நடத்தப்பட்டதாக தலைவர் ரகுநாதன் தெரிவித்தார்.
In brief (English)
Members of the Rs.10 Law Movement staged an unusual protest on Anna Salai, Puducherry, sitting with covered heads facing a wall, against price rise and government inaction.

