புதுச்சேரி

புதுச்சேரி பட்ஜெட் 2026-27: சட்டப்பேரவையில் முதலமைச்சர் என். ரங்கசாமி தாக்கல் செய்தார்

புதுச்சேரி, ஆக. 19: புதுச்சேரி மாநிலத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்களின் ஆளுநர் உரையுடன் முறைப்படி தொடங்கியது. இக்கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வாக, புதுச்சேரி மாநிலத்திற்கான 2026–27-ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) மாண்புமிகு முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை முன்னிறுத்தி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்தன. குறிப்பாக, உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் K. நாராயணசாமி அவர்கள், முதலமைச்சரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த பட்ஜெட் மூலம் பல்வேறு புதிய நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரவு செலவுத் திட்டத்தின் முழுமையான விவரங்கள் குறித்து சட்டப்பேரவையில் விரிவான விவாதங்கள் நடைபெற உள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன