புதுச்சேரியில் ரிவர் மின்சார ஸ்கூட்டர் நிறுவனத்தின் முதல் விற்பனை மையம் திறப்பு
புதுச்சேரி, அக்டோபர் 21: மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் மொபிலிட்டி, தமிழ்நாட்டில் தனது வணிக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகப் புதுச்சேரியில் தனது முதல் விற்பனை மையத்தைத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரி பீட்டர் நகர் 100 அடி சாலையில் ராம் குழுமத்துடன் இணைந்து இந்த விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் நிறுவனத்தின் முதன்மை மின்சார ஸ்கூட்டரான இண்டி விற்பனை செய்யப்படுவதுடன், வாகன உதிரிபாகங்கள், பிரத்தியேக அணிகலன்கள் மற்றும் விற்பனைக்குப் பிந்திய சேவைகளும் வழங்கப்பட உள்ளன. மேலும், தட்டாஞ்சாவடியில் பிரதான விற்பனை மையத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் 1960 சதுர அடி பரப்பளவில் பிரத்தியேக சேவை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகன பயன்பாட்டை அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதற்கான நிறுவனத்தின் பயணத்தில் புதுச்சேரி விற்பனை மையம் மற்றொரு முக்கிய முன்னேற்றம் என்று ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் மணி தெரிவித்தார். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் சேவையை வழங்க நிறுவனம் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது இந்தியா முழுவதும் 90க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களைக் கொண்டுள்ள ரிவர் நிறுவனம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், கேரளா, தமிழ்நாடு மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றது. புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இண்டி மின்சார ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 1,68,922 என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் விற்பனை மையத்தில் நேரடியாக ஸ்கூட்டரை ஓட்டிப் பரிசோதிக்கவும் முன்பதிவு செய்யவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
