ராமநாதபுரம்: ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சியை நேரில் ஆய்வு செய்த எஸ்.பி சந்தீஷ் ஐ.பி.எஸ்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர்களின் கவாத்து (பரேடு) பயிற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐ.பி.எஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல் துறையினரின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, காவலர்களின் சீருடை முறை, அணிவகுப்பு ஒழுங்கு மற்றும் கவாத்து பயிற்சியின் தரம் ஆகியவற்றை அவர் விரிவாகப் பார்வையிட்டார்.
மேலும், இப்பயிற்சியில் பங்கேற்ற காவலர்களிடம் குறைகள் மற்றும் தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்த எஸ்.பி சந்தீஷ் ஐ.பி.எஸ், அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் காவலர்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும் உடல் தகுதியுடனும் பணியாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.



