புதுச்சேரி

புதுச்சேரியில் போக்குவரத்து விதிமீறல்: ஆகஸ்ட் மாதத்தில் 13,884 வழக்குகள் பதிவு!

புதுச்சேரி, செப். 04: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்தவும் காவல்துறை சார்பில் தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 13,884 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி நகரப் பகுதிகள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், சிக்னல்களை மதிக்காமல் செல்லுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்குதல், அதிவேகப் பயணம் மற்றும் முறையான ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும்,

உயிரிழப்புகளைத் தடுக்கவும் பொதுமக்கள் அனைவரும் மோட்டார் வாகன சட்ட விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், விதிகளை மீறுவோர் மீது வரும் நாட்களிலும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் புதுச்சேரி காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன