புதுச்சேரி

காரைக்காலில் பாரம்பரிய சுகாதார பூங்காவிற்கு துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் அடிக்கல் நாட்டினார்

காரைக்கால் திருநல்லாறு பகுதியில் தர்மபுர ஆதீனம் ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதார பூங்கா அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி உரை நிகழ்த்தினார். ஆன்மீகமும் சமுதாய பணியும் இணையும் இந்த புனித நிகழ்வில் தர்மபுர ஆதீனத்தின் 27வது சன்னிதானம் மாசிலாமணி தேசிக சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயுஷ் மருத்துவத்தின் மகத்துவத்தைப் பரப்பும் வகையில் மூலிகை ஆராய்ச்சி, யோகா மற்றும் தியான மையங்களுடன் இந்தப் பூங்கா செயல்படும் என ஆளுநர் குறிப்பிட்டார். மேலும் தர்மபுர ஆதீனத்தின் சமுதாய மற்றும் கல்வி சேவைகளைப் பாராட்டி பேசினார்.


Puducherry Lieutenant Governor Kailashnathan laid the foundation stone for an integrated traditional healthcare park at Dharmapuram Adheenam in Thirunallar, Karaikal. Speaking at the event, the Lt. Governor highlighted the importance of combining spirituality with community service and praised the 27th Gurumaha Sannidhanam Masilamani Desiga Swamigal for the initiative. The park will feature Ayush medical research, herbal gardens, yoga, and meditation centers aimed at promoting holistic health. Kailashnathan also lauded the Adheenam’s ongoing social welfare efforts, including free meals and educational support.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன