புதுச்சேரி

தமிழகம் மற்றும் புதுவையில் 45,000 அறக்கட்டளைகள் பதிவு: வருமான வரித்துறை ஆணையர் தகவல்

லாப நோக்கமற்ற அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கான வருமான வரி சட்ட விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் புதுச்சேரியில் தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வருமான வரித்துறை ஆணையர் பிரேமானந்த், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 45,000 அறக்கட்டளைகள் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த ஓராண்டில் மட்டும் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைகள் மீதான சுமார் 6,000 கோடி ரூபாய் வருமான வரி குறைத்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்புகள் தங்களது நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, துல்லியமான கணக்கு பராமரிப்பு மற்றும் காலக்கெடுவுக்குள் சட்டப்பூர்வ ஆவணங்களை சமர்ப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

In brief (English)

Income Tax Commissioner Premanand revealed that roughly 45,000 trusts are registered in TN and Puducherry, with Rs 6,000 crore tax relief provided last year.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன