புதுச்சேரி

உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துடன் காமராஜ் நகர் எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சந்திப்பு: தொகுதி வளர்ச்சி, போக்குவரத்து குறித்து ஆலோசனை!

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயத்தை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது லோக் ஜனசக்தி கட்சியின் (LJK) நிர்வாக பொதுச் செயலாளர் ராம்குமார் உடனிருந்தார்.

இச்சந்திப்பின்போது, காமராஜ் நகர் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சிப் பணிகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக, காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட முக்கிய சாலைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறின்றி போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் உள்துறை அமைச்சருடன் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன