புதுச்சேரி

அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள்: திருக்கனூரில் மடிக்கணினி, கல்வி உதவித்தொகை நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாளையொட்டி, மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட திருக்கனூர் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவினை திருக்கனூர் பகுதியைச் சேர்ந்த அருண் பேக்கரி சரவணன், கலியமூர்த்தி, நாஜிம், பாரதி மற்றும் வினோத் ஆகியோர் ஒருங்கிணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் மற்றும் அவரது மனைவி திருமதி வசந்தி நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, கேக் வெட்டி பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாணவ, மாணவிகளின் கல்வித் தேவைக்காக 2 பேருக்கு இலவச மடிக்கணினிகள் (Laptops), 3 பேருக்கு உயர்கல்வி உதவித்தொகையாக ரூ.75,000 மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 1,000 பொதுமக்களுக்கு சிறப்பு பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன