புதுச்சேரி

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரி: உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்தவுடன் புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று முதலமைச்சர் என். ரங்கசாமி சட்டப்பேரவையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எழுந்த கேள்விக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதிலளித்துப் பேசினார். அப்போது, “சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நான் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் முறைப்படி நடத்தப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு போதுமான நிதியை வழங்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான தனிநபர் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த சட்ட ரீதியான வழக்குகள் அனைத்தும் முடிவடைந்ததும், புதுச்சேரியில் தாமதமின்றி விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்” என்று அறிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன