புதுச்சேரி

ஈஷா கிராமோத்சவ போட்டியில் புதுச்சேரி குமாரப்பாளையம் வாரியர்ஸ் அணி வெற்றி: அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டு!

புதுச்சேரி: ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெற்ற 18-வது கிராமோத்சவம் – ரூரல் பிரீமியர் லீக் (Rural Premier League 2026) இரண்டாம் கட்டப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற புதுச்சேரி குமாரப்பாளையம் வாரியர்ஸ் அணியினர், மாநில உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயத்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான இத்தொடரின் இரண்டாம் கட்டப் பிரிவில் மொத்தம் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தென்பள்ளிப்பட்டு அணியும், புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த குமாரப்பாளையம் வாரியர்ஸ் அணியும் மோதின. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குமாரப்பாளையம் வாரியர்ஸ் அணி முதலிடம் பிடித்து வெற்றி வாகை சூடியதுடன், ₹15,000 பரிசுத்தொகையையும் வென்றது.

மேலும், இத்தொடரின் சிறந்த வீராங்கனையாகக் குமாரப்பாளையம் வாரியர்ஸ் அணியின் செல்வி கா. காயித்ரி தேர்வு செய்யப்பட்டார். அவருக்குச் சிறப்புப் பரிசாக ₹1.40 லட்சம் மதிப்புள்ள Gravton QUANTA லிமிடெட் எடிஷன் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்று புதுச்சேரி மாநிலத்திற்குப் பெருமை சேர்த்த வீராங்கனைகளை உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் நேரில் பாராட்டி வாழ்த்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன