புதுச்சேரி

புதுச்சேரி குமரகுருபள்ளத்தில் நள்ளிரவில் சீரமைக்கப்பட்ட மின் விநியோகம்: நேரில் ஆய்வு செய்த விக்னேஷ் கண்ணன்!

புதுச்சேரி குமரகுருபள்ளம் பகுதியில் ஏற்பட்ட மின்தடையை சரிசெய்யும் பணிகள் நள்ளிரவில் துரிதப்படுத்தப்பட்டு, அப்பகுதிக்கு மீண்டும் மின் விநியோகம் உடனடியாக சீரமைக்கப்பட்டது.

குமரகுருபள்ளம் பகுதியில் நள்ளிரவு வேளையில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளான நிலையில், மின்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. நள்ளிரவு சுமார் 1 மணியளவில் இப்பகுதிக்கு நேரில் சென்ற விக்னேஷ் கண்ணன் MLA , மின்தடையை சரிசெய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து மின்சார வாரிய ஊழியர்கள் மேற்கொண்ட தீவிர சீரமைப்பு நடவடிக்கைகளின் பலனாக, மின்கோளாறு முழுமையாக சரிசெய்யப்பட்டு அப்பகுதி மக்களுக்கு தடையின்றி மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. நள்ளிரவு நேரத்திலும் விரைந்து செயல்பட்டு மின்தடையை போக்கிய நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் நிம்மதி தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன