புதுச்சேரி

சென்னையில் நடைபெற்ற ‘சித்ர நாட்டியம்’ நிகழ்ச்சியில் சாதனை: செல்வி நிஹாரிகாவை வாழ்த்திய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்!

புதுச்சேரி:

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ‘சித்ர நாட்டியம் – மயூரானந்தனம்’ என்ற பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த செல்வி. மா. நிஹாரிகா பங்கேற்று தனது கலைத் திறனை வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பாகப் பங்கேற்றதற்காக செல்வி. மா. நிஹாரிகாவிற்கு பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தான் பெற்ற சான்றிதழ் மற்றும் பரிசுகளை புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்களிடம் நேரில் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

அப்போது, செல்வி. மா. நிஹாரிகாவிற்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுத் தெரிவித்த அமைச்சர், கலைத்துறையில் மேலும் பல சாதனைகளைப் படைத்து புதுச்சேரிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன