புதுச்சேரி

குயவர்பாளையம் முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி பால் குட ஊர்வலம்: ஓம்சக்தி சேகர் அன்னதானம் வழங்கினார்

புதுச்சேரி:

புதுச்சேரி குயவர்பாளையம் பகத் சிங் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில், ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பால் குட ஊர்வலம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆடி மாத விழாவையொட்டி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்ட பக்திப் பரவசமூட்டும் பால் குட ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு வருகை தந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன