புதுச்சேரி

அமைச்சர் ஆ. நமச்சிவாயம் பிறந்தநாள்: மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரியின் பிரசித்தி பெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்புப் பூஜை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

உருளையன்பேட்டை தொகுதி பாஜக நிர்வாகி திரு. J.P. நாராயணன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்கள் தனது துணைவியார் திருமதி வசந்தி நமச்சிவாயம் ஆகியோருடன் நேரில் வருகை தந்தார். தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளில் பங்கேற்று மனமுருகி சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆலயத்திற்கு வருகை தந்திருந்த திரளான பக்தர்கள் மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அவரது துணைவியார் தங்கள் திருக்கரங்களால் அன்னதானம் வழங்கி பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர். இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு அமைச்சருக்குப் பொன்னாடை அணிவித்து தங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன