தமிழ்நாடு

பாஜக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.முருகானந்தம் நீக்கம்: தலைமை அதிரடி அறிவிப்பு

சென்னை, செப். 18:
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த எம்.முருகானந்தம், கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. எம்.முருகானந்தம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக, அவர் வகித்து வந்த கட்சிப் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையின் தொடர்ச்சியாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த அறிவிப்பு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன