புதுச்சேரி

முதல்வர் ரங்கசாமி பூரண நலத்துடன் ஆட்சி புரிய: மதுரை தத்தனேரி மயான காளி கோவிலில் சிறப்பு வழிபாடு!

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி பூரண உடல் நலத்துடன் நீடூழி வாழ்ந்து, புதுவை மாநிலத்தை தொடர்ந்து சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டி, மதுரை தத்தனேரி மயான காளி கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.

மதுரை தத்தனேரி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு மயான காளி திருக்கோவிலில் ஓம் சக்தி ரமேஷ் இந்த சிறப்பு பிரார்த்தனையை முன்னெடுத்து நடத்தினார். அப்போது, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டன.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருந்து புதுவை மக்களுக்கு தேவையான மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதி தழைத்தோங்க வேண்டும் என்றும் வேண்டி இந்த சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன