புதுச்சேரி

காரைக்கால் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி ஊக்கத்தொகை ரூ.1.60 கோடி: முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி, அக். 22: காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நெல் மற்றும் கரும்பு சாகுபடி பயிர் உற்பத்தி ஊக்கத்தொகையாக ரூ.1.60 கோடிக்கான காசோலையினை முதலமைச்சர் என். ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் வழங்கினார்.

புதுச்சேரி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் நெல் சாகுபடி மேற்கொண்டு வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் வீதமும், பட்டியலினப் பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.7 ஆயிரம் வீதமும் நிதி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் சம்பா, தாளடி மற்றும் கரும்பு சாகுபடி செய்த 1,077 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ரூ.1.46 கோடியும், பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த 143 விவசாயிகளுக்கு ரூ.13.52 லட்சமும் என மொத்தம் ரூ.1,60,46,270 ஊக்கத்தொகையாக ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்தொகைக்கான காசோலையை முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளிடம் வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், வேளாண்துறை செயலர் ரவி பிரகாஷ், இயக்குநர் ஜெயசங்கர், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன