புதுச்சேரி

புதுச்சேரியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க பாஜக தீவிர ஆலோசனை: வி.பி.ராமலிங்கம் தலைமையில் கூட்டம்!

புதுச்சேரி:

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் நாட்டு மக்களிடையே உரையாற்றும் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சியை புதுச்சேரி மாநிலத்தின் அனைத்துப் பகுதி மக்களிடமும் விரிவாகக் கொண்டு சேர்ப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையிலும் வானொலி வாயிலாக ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் பல்வேறு சாதனைகள், பொதுமக்களின் தன்னலமற்ற சேவைகள் மற்றும் தேசத்தின் வளர்ச்சி குறித்து உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியை புதுச்சேரி மாநிலத்தில் அதிக இடங்களில் ஒருங்கிணைத்து நடத்துவது மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கேட்கும் வகையில் ஏற்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பாஜக மூத்த தலைவர் வி.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர் கே.சுரேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், கட்சியின் மனதின் குரல் பிரிவு நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது களப்பணி ஆலோசனைகளையும் திட்டங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் முடிவில் பேசிய தலைவர்கள், பிரதமரின் உன்னத சிந்தனைகள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை புதுச்சேரி மாநிலத்தின் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர். மாநிலத்தின் அனைத்து வார்டுகள் மற்றும் கிராமப்புறங்களிலும் இந்நிகழ்ச்சிக்கான சிறப்புத் திரையிடல்கள் மற்றும் ஒலிபரப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன