புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவை ஓவியக் கண்காட்சி: பி.எல்.சந்தோஷ் தொடங்கி வைத்தார்!

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவை மற்றும் ஆட்சி சாதனைகளை விளக்கும் வகையிலான சிறப்பு ஓவியக் கண்காட்சி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க ஓவியக் கண்காட்சியை, பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முறைப்படி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநில பாஜக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க மக்கள் பணி, மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வரலாற்று சிறப்புமிக்க மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் தேசத்தின் வளர்ச்சிப் பயணம் ஆகியவை இந்த ஓவியங்கள் மூலம் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட ஓவியக் கண்காட்சியை புதுச்சேரி பொதுமக்கள், பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன