தமிழ்நாடு

பனை மரங்களைப் பாதுகாக்க தொடரும் ‘பனை பாதுகாப்பு இயக்கம்’: 2.10 கோடி நிதி

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை வெட்டுவதைத் தடுத்து அவற்றைப் பாதுகாக்கவும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ‘பனை பாதுகாப்பு இயக்கம்’ தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடங்கள் அமைத்தல், பனை விதைகள் விநியோகம், பயிற்சி அளித்தல் ஆகிய பணிகளுக்காக 2.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கிள்ளிக்குளம் பனை ஆராய்ச்சி நிலையத்தில் குட்டை பனை மரங்கள் குறித்த ஆராய்ச்சி துரிதப்படுத்தப்படும்.

In brief (English)

The Tamil Nadu government will continue its Palmyra Protection Mission with a budget of Rs 2.10 crore to prevent indiscriminate cutting of palmyra trees and support artisan livelihoods through training and processing units.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன