தமிழ்நாடு

மதுரையில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கோலாகல தொடக்கம்: வெற்றியாளர்களுக்குப் பதக்கங்கள் வழங்கல்!

மதுரை: மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டன.

இவ்விளையாட்டுப் போட்டிகளை முறைப்படி துவக்கி வைத்து, பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் சிறந்து விளங்கி வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இளைஞர்களின் விளையாட்டுத் திறனை வெளிக்கொணரவும், அவர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளுக்குத் தயார்படுத்தவும் இத்தகைய போட்டிகள் பெரும் ஊக்கமாக அமைகின்றன.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், இ.ஆ.ப., மாநகராட்சி பொறுப்பு மேயர் / துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.

மேலும், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அ.கல்லாணை, மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி, மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் மதார் பதூருதின், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.கோபிசன் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ம.விஜய் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத் துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உரிய அங்கீகாரமும் பரிசுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன